பதில் புரியவில்லை

அலைபேசியில் என்னவளின்
அலை ஓசை!
செவி மடல்களில் இனிக்கும்
இனிய கீதம்
அவளது குறளோசை!

அவள் தொடுக்கவில்லை!
அவளது தமயன்!
அறிமுகம் அற்றதால்,
எம் பெயரைச் சொல்லென
அவளது குறள்!

தெரியாது என
நடிக்க கோபம்!
நலம் விசாரிக்க
இல்லை அவனது நினைவு!
மறந்தேன் என்றாள்!

மறந்ததால் மலைத்து நின்றேன்!
இல்லாமல் இருக்கட்டும்
என் நினைவு அவளிடம் என்றேன்!

நிழலென நினவது
துறத்தும் வேளை
மறக்க நினைத்தேன்!
என் மனமதை மறைக்க நினைத்தேன்!

நினைவது இல்லாமல் இருக்க
ஏன் அழைத்தாள் அவள்
தமயனை என்னை நோக்க சொல்லி?

இருக்கும் இதயமதை
மறைத்தாளோ?
யாரிடம் பதில் கேற்பேன்?
கூறுங்கள் தோழர்களே!......

எழுதியவர் : சந்தோஷ் (11-Dec-14, 12:19 pm)
சேர்த்தது : SanthoshKumar
Tanglish : pathil puriyavillai
பார்வை : 57

மேலே