இவர் வாழ நீ எழுவாய்

கொடுமை கண்டு பொங்கி எழு
கடவுள் உனைக் காத்திடுவார்
கனவு கண்டு உயிர்த்து எழு
கவலை இன்றி வாழ்ந்திடுவாய்!!

இரங்கினார்க்கு உதவ எழு
ஈருலகம் உனை ஏற்கும்
ஏற்றம் கருதி உழைக்க எழு
இமயம் போல உயர்ந்திடுவாய்!!

கூடி வாழ இனங்க எழு
காலம் உனை வரவேற்கும்
கலைகள் பல பயில எழு
கடலாய் அறிவை பெற்றிடுவாய்!!

தொண்டு செய்ய துணிந்து எழு
துணை பல நீ பெற்றிடுவாய்
துன்புற்றோர் காக்க எழு
துயர் மறந்து வாழ்ந்திடுவாய்!

மனம் திருந்தி வாழ எழு
மாலை போட்டு வாழ்த்திடுவார்
மடமைதனை வெறுத்து எழு
மனித மனங்கள் வென்றிடுவாய்!!

தனிமைதனை உடைத்து எழு
தேனாய் என்றும் சுவைத்திடுவாய்
தடம் மாறுவார் விழிக்க எழு
தானைத் தலைவன் ஆகிடுவாய்!!

இவர் வாழ நீயும் எழு
இவ்வுலகம் போற்றக் காண்பாய்
இகமது அன்பு சேர எழு
எல்லார் உள்ளங்களிலும் நீ இருப்பாய்!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (11-Dec-14, 12:12 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 138

மேலே