எங்கே அதிர்ஷ்டம்

வெகு நாளாய் என்னுள்
ஒரு வினா....

அதிர்ஷ்டம்... அதிர்ஷ்டம்....
என்கிறார்களே....
அது எங்கிருக்கிறது..
எப்படி இருக்கும்..
எப்படி வரும் ..
எதனால் வரும்..
எதற்காக வரும்..
எத்தணைதூரம் வரும்..

ஒரு வேளை அதிர்ஷ்டம்
ஆயுள் தண்டனை அடைந்திருக்கும்
அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தில்
வெள்ளை நிறத்தில் நிறைந்திருக்குமோ??

ஒரு வேளை அதிர்ஷ்டம்
அழகூட கண்ணீரின்றி
காய்ந்து கிடக்கும்
ஏழை விவசாயிகளின்
கண்களில் குடிகொண்டிருக்கும்
கனவுகளில் கரைந்து கிடக்குமோ?????

ஒரு வேளை அதிர்ஷ்டம்
அயோக்கியதனமனைத்தையும்
மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவன்
ஆலயம் தவறாது
இறைவழிபாட்டை இனியதாய்
முடிப்பதால் வந்துவிடுமோ???

ஒரு வேளை அதிர்ஷ்டம்
ஏழைகளின் கண்ணீரை
துடைக்க வருமோ?
இல்லை...
இன்னும் ஏமாளியாக்க
பாய்ந்து வருமா?

ஒரு வேளைஅதிர்ஷ்டம்
சிரிப்பையே கண்டிராத
கௌரவங்களை பிச்சைஎடுக்கும்
சில முதலாளிகளின்
இரும்பு பெட்டிக்குள்
இதயமின்றி வெகுநாள் வாழுமோ??
இல்லை....
வருடத்தில் ஒரு நாள் மட்டும்
மலிவான விலைக்கு
புதுத்துணி உடுத்தும்
ஓர் ஏழை குழந்தையின்
சிரிப்புக்குள் ஒரு நாள் மட்டும்
வாழ்ந்து போகுமோ??

எது எப்படியோ
இப்போதெலாம்அதிர்ஷ்டம்
ஏழைகளின் அரைசாண் வயிற்றைக்கூட
நிரப்ப போவதில்லை.....
அது
அரசியல்வாதிகள், அயோக்கியர்கள்
என ஈனர்களிடம்
அடைக்கலம் புகுந்துவிட்டது......

எழுதியவர் : ரோஜா வெங்கடேசன் (11-Dec-14, 11:47 am)
Tanglish : engae athistam
பார்வை : 88

மேலே