உறைபனி

கடிகாரத்தில்
முதன் முதலாய்
உறைபனி ......,
நின்றுவிட்ட கடிகார முட்கள்

கூச்சம் விட்டுப்போன
ஓரிரு நொடிகளில்
தலைநிமிர்ந்து பார்த்த
உன் முகம் ..............,

என் கடிதங்களை தவிர
வேறெந்த என் பேச்சுக்களிலும்
படியாத உன் நிழல் .............,

உன் நிழற்படத்தை
இஸ்பரிசித்து
அழிந்து போன
ரேகைகள்
பற்ற மறுக்கிறது
எதையும் ...........,

நீ தீண்டிப் போன
மலர்களில்
யுகங்கள் கடந்தும்
கண்டுணரும்
உன்
ஸ்பரிசம்..............,

நீ சட்டை செய்யாத
நினைவுகளில்
என் ஆயுளில்
குறைகிறது
ஒரு
யுகம் ...............,

எப்போதோ நீ உச்சரிக்கும்
என் பெயர்
ஆகிறது
ஒரு சொல்
கவிதை ............,

நீ என்னுள்
உறையும்
அந்த
ஒரு நொடிக்காக
உறைத்திருக்கும்
என் கடிகாரம் .............,

எழுதியவர் : haathim (11-Dec-14, 11:08 am)
பார்வை : 142

மேலே