செய்ந்நன்றி யறிதல் 9 - நேரிசை வெண்பா

இரு விகற்ப நேரிசை வெண்பா

யானன்றே செய்தாலும் தப்பாக சாட்சியும்
நானென்றே சொன்னாரே கன்னியப்பா - வானெனக்
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 11:9

குறிப்பு: எனக்கு நல்ல உதவிகள் செய்த நண்பர் ஒரு முறை நான் செய்யாத தவறுக்கு தீர விசாரிக்காமல் எனக்கெதிராகச் சாட்சியம் சொன்னார். அவரை நான் என்ன செய்ய முடியும்? அவர் செய்த உதவிகளை என்னால் மறக்க முடியவில்லை. பின், தகுந்த விசாரணைக்குப் பின் நான் நிரபராதி என்று ருசுவாகியது. அவரும் வருந்தி, என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Dec-14, 12:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே