இன்றிரவு ஒரு அதிசயம்

இன்றிரவு பூமிக்கு
இரு
நிலவுகளாம்
பெண்ணே
உன் வீட்டு யன்னலோரமாய்
அன்னாந்துப் பார்
ஆகாயத்தை
ஒரு நிலவு
வானில் மிதந்து கொண்டே
பூமியை
எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறது
மற்றொன்று ஜென்னலோரமாய்
நின்று
அந்த வான்நிலவை
அன்னாந்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
அன்புடன்
ஏனோக் நெஹும்.
நேற்றிரவு அன்புத் தோழிக்கு ஒரு கவிதை எழுத யோசித்துக்கொண்டிருக்கும் போது, மனதில் தோன்றிய வரிகள் இவை