கிராமிய காதலன்

நாலுநாளா பாத்திக்கட்டி
நான் விதைச்சேன் விதைநெல்லு!
நஞ்சை நிலம் காஞ்சிடாம
கண்விழிச்சு நீர் இறைச்சேன்!
ராசாத்தி... !அடி ராசாத்தி...
உன் நினைப்பாலே நான் தவிக்க ...

வடம்பிடிச்சு நீரிறைச்சி
கையுந்தானே காப்பு காச்சிருச்சி
ராசாத்தி உன் முகம் பார்த்த காயமும்தான் ஆறிடுமே!
நீ வாராயோ ! நீ வாராயோ ! வரப்போரம் கஞ்சி சுமந்து
நீ வந்தால் தான் தீருமடி கண்ணெரிச்சல் !!

காலை கதிரவனும் கண்விழிக்குமுன்னே நான் விழிச்சேன்!
சாளை தோள் சுமந்து காளையை கையில் பிடித்து
சாலையில்லா பாதையிலே சலசலங்கும் சலங்கையோடு
வயல் பார்த்து நடந்தேனடி ! உன் வாசத்திலே விழுந்தவனடி!!
அடி ராசாத்தி ...!ராசாத்தி உன் நினைப்பாலே நான் தவிக்க ...

போட்ட முத்து முளைச்சிருச்சி
நாற்றுகளாய் துளிர்த்திரிச்சி!
நம்ம வாழ்வை செழிப்பாக்க
வானம் மழை பொழிஞ்சிருச்சி!
அடி ராசாத்தி ...!ராசாத்தி உன் நினைப்பாலே நான் தவிக்க ...

பாத்தியில பயிர் பறித்து
நாத்து நட நீ வாடி -எனை பார்த்து
தேகம் தேத்தி போக நீ வாடி !!
தையுந்தான் பொறக்கட்டுமே
தாலி கொண்டு நான் வாரேன்!
தாவணியில் தவிக்கும் உன்மேனிக்கு
சேலையாக நான் மூட
அடி ராசாத்தி ...! ராசாத்தி உன் நினைப்பாலே நான் தவிக்க ..

விளைஞ்ச நெல்மணிபோல்
தலை சாஞ்சு நீ நடக்க
மார்கழி குளிராட்டம் சிலிர்க்குதடி என்மேனி!
மணவறை காண துடியாய் துடிக்குதடி எம்மனசு
நீ வாராயோ !முத்தமொண்ணு தாராயோ !
முத்து கண்ணால் பாராயோ !என்னவளே ...
அடி ராசாத்தி...!ராசாத்தி உன் நினைப்பாலே நான் தவிக்க ...

(குறிப்பு: எனது 400வது படைப்பு கிராமிய காதலர்க்கு சமர்ப்பணம் )

எழுதியவர் : (11-Dec-14, 12:40 pm)
பார்வை : 183

மேலே