மனிதனாய் நடிப்பவன்
பிறவாத பிறப்பெடுத்த பிழைப்பிறப்பே ..!
குற்றத்தின் பெருங்குற்றமே ..!
மனித இனத்தின் ஈனமே ...!
இந்தநூற்றாண்டின்
இரக்கமற்ற கொடுங்கோலனே..!
நாடுகள்தோறும்
மனிதனைப்போலவே
நடித்துகொண்டலையும்
நாசமிருகமே ..!
எங்கள் வைரியே..
இலங்கை அதிபனே ..!
ஈழத்தமிழினத்தை
இரக்கமின்றி கொன்றழித்துவிட்டு
யாத்ரீகனாய் இங்கு வந்து
பக்திநாடகமாபோடுகிறாய் ..? ...

