இளைஞர் விடுதி
நண்பகல் பதினோரு
மணிக்கு பொழுது புலரும்
நள்ளிரவு இரண்டு
மணிக்கு தூக்கம் பிடிக்கும்
காபி பாதி தேயிலை பாதி
கலந்து பருக மனது துடிக்கும்
கண்ணாடியின் முன்
வெகு நேரம் நிற்கும்
தலைமுடியை வாரி திரும்ப
ஒருமுறை கலைக்கும்
முகபரு நீக்கி வாங்கும்
எண்ணெய் வடியும் முகம்
கழுவ அடடா சிணுங்கும்
வேகம் நிறைந்த வாகனம்
கடை வாசலில் நிறுத்தி
மேலிருந்து பெரிய விவாதம்
நொடியில் இணைக்கும்
அலைபேசி அரைநாள்
பொழுது தடவி தடவி
அசைபோடுவதில் அலாதிசுகம்
துணிமணிகளும் பொருள்களும்
பழசுபோல் தோன்ற விருப்பம்
இசைசேர்க்கையும் புதினங்களும்
ஒருமாதிரியாய் இருக்க பிடிக்கும்
பல்கலைகழகங்களும்
தோற்று போகும்
இளைஞரின் மாற்றத்திற்கு
ஈடாக நமது கல்வி ஞானம்
எல்லாம் அற்றுபோகும்

