சமரசம் உலாவும் பெண்ணுடல்
எங்கு இல்லை
எந்த மதத்தில்
இல்லை இந்தக்
காமுகர்கள்.....
சிவ சிவா என்று
மந்திரம் ஓதுகிறான்
சிவனே என்று
சரணடைய வரும்
பெண்கள் மேல்
கையைப்
போடுகின்றான்....
பூநூல் போட்ட
பூசாரியாக
நடமாடுகின்றான்
பூவையரைக் கண்டால்
முகர்ந்து விட இடம்
தேடுகின்றான்......
முத்தம் கொடுத்து
அவன் பித்தத்தை
அடக்குகின்றான்
பில்லி சூனியம்
என்று கூறியே
பெண்கள் வாய்
திறக்க தடை
போடுகின்றான்.....
ஜேசு நாமம்
பாடுகின்றான்
வெள்ளை உடை
அணிந்து ஒருத்தருக்கு
இல்லை கிருத்துவ
மத மக்களுக்கே
மதிக்கத்தக்க தந்தையாக
வலம் வருகின்றான்....
வீட்டிலோ பாவ
மன்னிப்பு கேட்க
வரும் பெண்களின்
உடலை ஓநாயாக
மாறி சுவைக்கின்றான்....
வெள்ளை உடை
போர்த்திய
வேங்கையாக
உலாவுகின்றான்....
அப்பாவி சிறுமிகளின்
வாழ்க்கையை
அழிக்கின்றான்
தினமும் ஜெபிக்கின்றான்
இவன் ஜெபிப்பது
எட்டுமா ஜேசுநாதர்
காது வரை.....
ஐந்து வேளையும்
தொழுகின்றான்
எதைக் கூறினாலும்
கராம் அல்ல என்று
அல்லாவின் சீடனாக
நடிக்கின்றான்.......
வெள்ளி தோறும்
பள்ளிவாசலில்
பாதம் பதிக்கின்றான்
மதத்துக்கு மதிப்பு
கொடுக்கின்றான்
மார்க்கத்தை
போதிக்கின்றான்
மனித தர்மத்தை
மறந்தே நடக்கின்றான்....
தன் மனைவிக்கு
பணிப்பெண் என்று
பல ஆயிரம் செலவு
செய்து வரவழைக்கின்றான்...
அவன் படுக்கை
அறைக்கு விரட்டியே
அழைக்கின்றான்...
இவன் ஐந்து வேளை
இல்லை ஆயுள் வரை
தொழுதாலும்
மோட்ஷம்
அடையப்போவது
இல்லை.......
நீதிக்கு கட்டுப் பட்டது
குரான் இதையே
இவன் மறக்கின்றான்....
அன்புக்கு இலக்கணமாக
புத்தபெருமான்
அவர் வழி வந்தவனோ
பல குற்றங்களுக்கு
பெருமான்.......
ஆல மரத்தின்
நிழலில் அமர்ந்து
மனிதகுலத்தின்
பெருமையை புகட்டினார்
புத்த பெருமான்......
அவர் வம்சாவழியோ
சிறுமி முதல் கிழவி
வரை சீரழிக்கும் வழி
முறையை மாளிகையில்
போதிக்கின்றது.....
அரக்கர் கூட்டம்
அழித்து விட்டது
ஆயிரம் ஆயிரம்
இளம் பெண்களின்
கற்பைக் கள்ளுக்
குடிப்பதுபோல்....
மதம் இனம் மொழி
என்ற வேறுபாட்டின்
போதை தலைக்கு
ஏறியதால்.......
மதத்துக்கு மதம்
இனத்துக்கு இனம்
மலிந்து கிடக்கின்றன
காமுகர் வர்க்கம்
அவைகளை களை எடுக்க
முடியலேயே என்பதுதான்
பலரின் வருத்தம்.....
ஃஃ தலைப்பு ஆதவன் நன்றிஃஃ
{குறிப்பு} ....இவை சில ஆண்களுக்காக
வரையப்பட்டவை......