சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 20 ராக ஸுதா ரஸபாநமு சேஸி – ராகம் ஆந்தோளிகா

'ஆந்தோளிகா' என்ற ராகத்தில் அமைந்த 'ராக ஸுதா ரஸபாநமு சேஸி' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

மனமே! ராகம் எனப்படும் அமுத ரசத்தைப் பருகி மலர்ச்சி பெறுவாயாக.

அது யாகம், யோகம், தியாகம், போகம் இவற்றின் பலன்களைத் தரவல்லது.

ஸதாசிவ (சுத்த சைதன்ய) ஸ்வரூபமான நாதம்.பிரனவம், ஸ்வரம் இவற்றையறிந்தவர்களே ஜீவன் முக்தரென்று இத் தியாகராஜன் அறிவன்.

பாடல்:
பல்லவி:

ராக ஸுதா ரஸபாநமு சேஸி
ராஜில்லவெ ஓ மநஸா (ரா)

அனுபல்லவி:

யாக யோக த்யாக போ க ப ல மொஸங்கே (ரா)

சரணம்:

ஸதா சிவ மயமக் நாதோ ங்கார ஸ்வர-
விது லு ஜீவந்முக்துலநி த்யாக ராஜு தெலியு (ரா)

இது ஒரு பிரபலமான ராகம். பிரபல குரலிசை வித்வான் மதுரை சோமு அநேக கச்சேரிகளில் இப்பாடலைப் பாடக் கேட்டிருக்கிறேன்.

Madurai Somu-Yella Venkateswara Rao-Ragasudarasa- Bombay 1980 என்று வலைத்தளத்தில் பதிவு செய்து இப்பாடலைக் கேட்கலாம்.

எழுதியவர் : டி.எஸ்.பார்த்த ஸாரதி (13-Dec-14, 12:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

சிறந்த கட்டுரைகள்

மேலே