இயற்கை காதல்-சகி
@@இயற்கை @@
மேகம் என்னும் காதலன்
மலை என்ற தன காதலியை
அணைத்துக்கொள்ளும்
இன்ப நேரம்...
தன் காதல் தூய்மை
என்பதை சொல்லாமல் சொல்லி
அணைக்கிறான்...
மேகம் என்னும்
காதலன் ...மலை என்னும்
தன ஆருயிர் காதலியை ...
மழை என்னும் மழலையை
பெற்றெடுக்க ...
மண்ணில் பசுமை
என்னும் சொந்தங்கள்
செழிக்க ...
வறுமையின்றி சொந்தங்கள்
வாழ வளம் என்னும் வரம் பெற ...
இயற்கை என்னும் எழில் அழகை
மதிப்போம் நாம்...
மழை என்னும் மழலையை
வரவேற்க மண்ணில்
இயற்கையை ரசிப்போம் ...
மதிப்போம்....