மூச்சு குழலின் முகவரிக்கு முத்தம் பதிக்கும் காதல் - இராஜ்குமார்

மூச்சு குழலின் முகவரிக்கு முத்தம் பதிக்கும் காதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் எண்ணம் என்றுமே
காதல் செய்யும் - உன் கன்னக்குழியில்
வீழ்ந்துப் பார்த்தேன் விதையாக ..!!

உன் விழிநீர் பட்டால்
மரித்துப் போகும் என்னுயிர் ..

வியர்வை மட்டும் நீ தந்தால்
விருச்சமாகும் அவ்வுயிர் ..!

சிரிப்பில் கொஞ்சம் நீ மலர
ரசித்து கொண்டே நான் வளர

நரம்பில் நகர்ந்து காதல் பரவ
செல்லின் உட்கருவும் உனதாகும் ..!

கன்னத்தில் அழகாய் நான் முளைத்து
உன்கவலை எல்லாம் நான் கலைப்பேன்

தளிராய் கொஞ்சம் நான் மிளிர்ந்து
உன்அசதி எல்லாம் நான் அழிப்பேன்

இத்தளிரை உன் விரல் தொடும் கணமே
என்மேல் அக்கறை காட்டும் குணமாக

இப்போ விட்டு போனது உன் மனமே
இன்னும் வாழ சொல்லுது அனுதினமே

சின்ன செடியாய் நான் வளர
அன்ன நடையில் நீ நகர

நெற்றிக்கு நானே நிழல் தரவே
உன் புருவமும் புது பூங்காவே ..,!

இனி உன்
இதழில் நானே சிரிப்பாகி
இமைக்கும் நானே நிழலாவேன்

பெண்ணே - உன்
மூச்சு குழலின்
முகவரிக்கு
முத்தம் பதிப்பதே
என் காதல் !!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-Dec-14, 5:12 pm)
பார்வை : 239

மேலே