அப்பாவின் கவலை

பெரியவளுக்கு அடுத்தமாசம்
தலை பிரசவம்...
பி.இ படிக்கும் மகனுக்கு
பீஸ் கட்டணும்...
பிளஸ் டூ முடிச்சதும்
சின்னவளை
டீச்சர் டிரெய்னிங்ல சேர்க்கணும்...
மாடி வீட்ட சீக்கிரம்
கட்டி முடிச்சி
கிரக பிரவேசம் நடத்தணும்...
இப்படி,
அடுத்தடுத்த கவலைகளுடன்
பேங்க்க்கு நடந்துசென்றார் அப்பா...
வேற என்ன
லோன் வாங்கலாம் என்று!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (16-Dec-14, 1:03 pm)
Tanglish : appavin kavalai
பார்வை : 82

மேலே