புரிதலில் அறிதல் - இராஜ்குமார்

புரிதலில் அறிதல்
~~~~~~~~~~~~~~

தான் தேடிய
ஒற்றை அன்பு
கிடைத்த பின் ...

தன்னை தேடும்
ஆழ்ந்த அன்பையும்
ஒரு ஓரமாய்
ஒதுக்கி வைக்கிறான்

புரிதல்
ஏனோ ஒருபுறமே
உள்வாங்கப்பட்டு
மறுபுறம் ஏனோ
உடைக்கப்படுகிறது ...

ஒதுங்கியவன்
ஒதுங்கியே நிற்கிறான்
ஒதுக்கியவனை
ஒதுக்க விரும்பாமல் ..

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (16-Dec-14, 7:53 pm)
பார்வை : 369

மேலே