மறந்து விட்டார்கள்

கள்ளிப்பால் கொடுத்து
பெண்ணைக் கொல்கிறார்கள்
கௌரவக் கொலையால்
பெண்ணைக் கொல்கிறார்கள்
வரதட்சனை கொடுமையால்
பெண்ணைக் கொல்கிறார்கள்
வன் கொடுமையால்
பெண்ணைக் கொல்கிறார்கள்
வயது வித்தியாசம் இல்லாமல்
பெண்ணைக் கொல்கிறார்கள்
மறந்து விட்டார்கள்
இவன் கருவையும்
இவனை கருவாயும்
சுமப்பவள் பெண் என்பதை...

எழுதியவர் : sathishsana (16-Dec-14, 9:53 pm)
சேர்த்தது : m.sathishkumar
Tanglish : maranthu vittaargal
பார்வை : 99

மேலே