m.sathishkumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : m.sathishkumar |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 18-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 33 |
தமிழில் கவிதை எழுத ஆசை
அன்று
கரும்பலகை பாடம்
வெறும் தரை கூடம்
தமிழ் மொழியே முழுவதும் வேதம்
இன்று
ஒளிப் பதிவான பாடம்
குளீர் வசதியான கூடம்
தமிழ் மொழியோ முற்றிலும் சேதம்
அன்று
கரும்பலகை பாடம்
வெறும் தரை கூடம்
தமிழ் மொழியே முழுவதும் வேதம்
இன்று
ஒளிப் பதிவான பாடம்
குளீர் வசதியான கூடம்
தமிழ் மொழியோ முற்றிலும் சேதம்
பத்து ரூபாய் திருடினான்
பசி வாட்டிய
கொடுமையினால்
பல கோடி திருடுகிறான்
பதவியைக் கொண்டு
திறமையினால்
பசியினால்
திருடியவனுக்கு
சிறைச்சாலை
பதவியினால்
திருடியவனுக்கு அவன்
பெயரில் ஒரு சாலை
தான் வாழ திருடியவனுக்கு
ஆயுள் தண்டனையாம்
தன் வாரிசும் வளர
திருடியவனுக்கு
ஆறு அடியில் சிலையாம்..
கள்ளிப்பால் கொடுத்து
பெண்ணைக் கொல்கிறார்கள்
கௌரவக் கொலையால்
பெண்ணைக் கொல்கிறார்கள்
வரதட்சனை கொடுமையால்
பெண்ணைக் கொல்கிறார்கள்
வன் கொடுமையால்
பெண்ணைக் கொல்கிறார்கள்
வயது வித்தியாசம் இல்லாமல்
பெண்ணைக் கொல்கிறார்கள்
மறந்து விட்டார்கள்
இவன் கருவையும்
இவனை கருவாயும்
சுமப்பவள் பெண் என்பதை...
அழுதேன்
கண்ணீரை துடைத்தாள்
தூங்கினேன்
தாலாட்டு பாடினால்
விழுந்தேன்
தாங்கி பிடித்தாள்
விளையாடினேன்
அழகை ரசித்தாள்
பத்து மாதம்
சுமக்கவில்லை
நம்மை பார்த்து
பார்த்து சுமக்கிறாள்
"அம்மா"
கேட்கிறார்கள்
பணம்
அனுபவம்
மதிக்கவில்லை
அறிவு
திறமை
கொடுக்கவில்லை
வாய்ப்பு
வாழ்க்கை
காற்றில்
கரைந்த காவியம்
மழையில்
நனைந்த ஓவியம்
நெருப்பில்
எரிந்த காகிதம்
தனித்தே
மிதந்த பாய்மரம்
"என் காதல்"