இன்றைய கால தீர்ப்பு
பத்து ரூபாய் திருடினான்
பசி வாட்டிய
கொடுமையினால்
பல கோடி திருடுகிறான்
பதவியைக் கொண்டு
திறமையினால்
பசியினால்
திருடியவனுக்கு
சிறைச்சாலை
பதவியினால்
திருடியவனுக்கு அவன்
பெயரில் ஒரு சாலை
தான் வாழ திருடியவனுக்கு
ஆயுள் தண்டனையாம்
தன் வாரிசும் வளர
திருடியவனுக்கு
ஆறு அடியில் சிலையாம்..