ரகசிய மொழிக்காரி

உன் தொடக்கமே
ஒரு பாதி தானே....
மீதி முழுக்க
மறு பாதி நானே.....
நீ இல்லாத
நாட்களில்
நான் இல்லாத
நானே....
நான் இல்லாத
நானும்
உன்னை அல்லாத
தானே....
கிடக்கும் ஆழ் மனக்
கூட்டில்
மிதக்கும்
உன் காதல் கூற்று...
படிக்கும் தாள் முகம்
திருப்பி -விழி
சுரக்கும்
உன் விரல்கள் கேட்டு.....
சட்டென்று நீ வந்த
நேரங்கள்....
நெஞ்சோடு எனக்கின்று
பாரங்கள்....
எப்போதும் நமக்கான
தூரங்கள்.....
இப்போதும்
உடையுதெந்தன் சாரங்கள்....
உன் மொழி சொல்லும்
என் அலை பேசியில்...
விரல் தாண்டும் நர்த்தனங்கள்....
நீ உச்சரிக்கும்
என் பெயரில்
புது புது கீர்த்தனைகள்.....
சாத்திரங்கள் கோத்திரங்கள்
புரியவில்லை...
யாத்திரைகள் மட்டும்
இங்கு குறையவில்லை.....
முத்தங்கள் யுத்தங்கள்
தீரவில்லை
நீ தூர தேச தீவினிலே
ஆளும் முல்லை.....
எங்கெங்கு தேடினும்
அங்கோர் முகம் உனக்கு...
தங்கத்தமிழ் உன் இதழ் சொல்ல
புது தேடல் அகம் எனக்கு....
சொல்லாமல் போன
சொல்லாடல் தவிப்பு....
இல்லாமல் போகுமோ
நம் காதல் படைப்பு...
காட்சிக்கு அர்த்தம் சொல்லும்
கண்கள் உனது....
காணாமல் போக செய்த
காலம் எனது....
ஒரு முறை நீ
அழைப்பது
நீலக் குயிலின்
விழி இசைப் பூ ...
மறுமுறை நான்
அழைப்பது
தடாக தாகத்தின்
ஒலி அசைப்பு.....
ஓடை மனதில்
ஊஞ்சல் கட்டிய
நாட்கள் எங்கே....
கூடும் நாட்களில்
உன் கொஞ்சல் பாஷை
துடிக்குதிங்கே....
கொண்டைப் பூக்கள்
சூடும் படம்
வேண்டும் என்றும்....
முயல் தேசம்
ஆடும் படும்
மீண்டும் என்றும்.....
சொல்ல சொல்ல
நீரானாய். -உனைக்
காணவில்லை -கானல்
நீரானேன்.........
கவிஜி