ஒரு தடவை அழைத்துவிடு

ஏக்கங்களை தேக்கி வைத்துக் கொள்ளாதே
மனதில் தாக்கங்கள் தோன்றிடும்

ஒருதடவை மட்டும் அழைத்துவிடு ......

வாஞ்சை கொண்டே உன் பார்வையில்
வாரி எடுத்துக் கொண்டேன் உன் நினைவலைகளை

அறிவாளியாக நினைக்காதே
ஆணவம் உன்னை சூழ்ந்துவிடும்

அற்பத்தனம் என் பார்வையிலா -நீ
உயிர் வாழப் போகிறாய் என்ற -உன்
கேலிக்கையான பேச்சு

எனையும் என் காதலையும் ஒன்றும் செய்யாதடா
அஞ்ஞான உலகத்தை விட்டு விட்டு
மெய்யான வாழ்க்கையை வாழடா அன்று உணர்வாய்

நான் ஒன்றும் சாதாரண பெண்ணில்லை
கயல் கூறும் கல்மனப் பெண்ணடா ....

எழுதியவர் : கீர்த்தனா (17-Dec-14, 2:53 pm)
பார்வை : 97

மேலே