ஏக்கம்
(2 உருப்படாத பிள்ளை பெற்ற தாய் இறந்த தன் கணவனிடம் தன் பாரம் சொல்லி அழுதல்)
உளுந்து வருத்து வச்சே(ன்)
ஊத்து தண்ணி எடுத்து வைச்ச
ஊருக்கு போன அய்யாராசா
வீட்டுக்கு வரமாட்டீரா
தண்ணிதளதளக்க
தழைத்திண்ண ஆடு னிக்க
ஆலக்கு எடுக்காமபோனராசா
குளிக்க வரமாட்டிரா
உச்சி சிவந்திருக்கே
உமி இங்கு அரைச்சிருக்கே
கை வச்சி அளந்து வைக்க
வா ராசா வரமாட்டிரா?
பட்டமரம் செழிச்சி
பார்த்து சிரிக்குதைய்யா
பட்டம் நீர் போட்டுப்போன
நெல்கதிர் குனியுதைய்யா
வட்டம் நீ போட்டுவரும்
வரப்பிப்ப உடைந்ததைய்யா
வந்து நீ வரிஞ்சிக்கட்டி
வகையா வரப்புக்கட்டு
கட்டம்தரயெல்லாம்
காட்டுப்புல் ஆனதைய்யா
காணகம் போன அய்யா
காலத்தோடு வந்து சேரு
மூத்தபுள்ள இப்ப
மூனுச்சீட்டு ஆடுதைய்யா
மூக்கொழுகும்புள்ள இப்ப
முழு ஆளா நிக்குதைய்யா
ஆகா ஒண்ணுமில்லை
வெறும் ஆதவன் வீட்டுக்குள்ள
ஏக்கம் கொஞ்சமல்ல
எதுவுமே உறுப்படல
ஏறுக்குப்போன மாடு
என்னவோ செத்திடிச்சி
பேருக்கு ஒருமாடு
பாலுக்காய் கட்டியிருக்கு
ஆடிக்கு வெள்ளம் வந்தால் தான்
பத்தோ நூரோ கையில்வரும்
நீபெத்த புள்ளையாலா
அந்த காசும் கரைந்துவிடும்
வெத்தலை நான் எடுத்தாலே
ராசா ஒ(ன்) நெனப்பு வரும்
நெனப்பில் நான் அழுதாக்க
மனசெல்லா உடைந்து விழும்
செண்பகத்த விட்டுவிட்டு
சிவன்பதவி வாங்கிக்கிட்ட
சிரிப்பா சிரிக்கட்டுன்னு
சீக்கிரமே போயிப்புட்டா
பாசத்துக்கு பணத்துக்கும்
உதப்பட்டு சாவுரான்
பஞ்சத்தில் உயிர் வளர்த்து
பாவி நான் மாயிரன்
வாய்ப்பிருந்தால் வந்துவிடு
இல்லை=
வந்து வழியிருந்தால்
என்னைக் கொண்ணுவிடு