உடன் பிறவாச் சகோதரன்

ஏண்டா வீட்ல உனக்குப் பொண்ணூப்பாக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டியாம்?
டேய் உனக்கே தெரியும். எனக்கு ரண்டு அக்கா. அவுங்களுக்கும் கல்யாணம் ஆச்சு. கொழந்த குட்டியோட வாழ்ந்திட்டு இருக்காங்க. ரண்டு தங்கைங்க. அதிலே மூத்தவளுக்குக் கல்யாணம். போன வருஷம் தான் ஆச்சு. உனக்கும் தெரியும். இப்ப எனக்குக் கல்யாணம் பண்ணறம்ன்னு சொல்லறாங்க. ரண்டாவது தங்கைக்குப் பண்ணுங்க. எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன்.
ஏண்டா?

எனக்கு கல்யாணமே வேண்டாம்டா.. எனக்கு சகோதரிங்க நாலு பேரு. சகோதரன் ஒருத்தன்கூட இல்லாம இருக்கறது என் மனசை அரிச்சிட்டே இருக்குடா. அதனால என் உயிர் நண்பனான நீயே என் உடன்பிறவாச் சகோதரனா கடைசி வரைக்கும் இருந்தா அதுவே எனக்குப் போதும்ன்னு எங்க வீட்ல சொல்லிட்டேன்.

எழுதியவர் : மலர் (17-Dec-14, 7:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 176

மேலே