நீ விட்டுச் சென்றவைகள்

மனதின் ரணங்கள் நாட்கள் கடந்தாலும் ஆறாது...
மனதின் துக்கம் வருடங்கள் கடந்தாலும் போகாது ...
என் மனதில் உன் நினைவுகள் ஜென்மங்கள் கடந்தாலும் நீங்காது...
இனி யாரும் குடியிருக்க முடியாது...
கிழிந்து விட்ட மனதை தைப்பதற்கு வேறு எவரையும் அனுமதிக்க இயலாது
நீ விட்டுச் சென்ற நினைவுகளை கவிதைகளாக்கிக் கொண்டேன்
நீ விட்டுச்சென்ற கவிதைகளை நினைவுகளாக்கிக் கொண்டேன்
இவ் விரண்டையும் நிரந்தரமற்ற நிமிடங்களில்
ஜீவிக்கும் என் வாழ்க்கையாக்கிக் கொண்டேன்..!!

எழுதியவர் : சமீர் (17-Dec-14, 8:52 pm)
பார்வை : 87

மேலே