லஞ்சம்

வவுனியா வந்தால் பொதுவாக எனது மதிய சாப்பாடு வவுனியா மாநகரிலுள்ள 'வேல் கபே' ல் தான் இருக்கும். அன்றும் வழமை போல எனது நண்பன் ஒருவனுடன் சென்றிருந்தேன். வவுனியாவின் சிறப்பு கறியான கடலை + கத்தரிக்காய் பொரிச்சு கறி. (எத்தனையோ இடங்களில் சாப்பிடிருந்தாலும் வவுனியாவின் சுவை எங்கும் எனக்கு கிடைத்ததில்லை). வெள்ளிக்கிழமை என்பதால் பாயசம் வேற. நல்ல வெட்டு வெட்டினேன். பணத்தினை கொடுக்கும் பொழுது டிப்ஸ் எனும் கையூட்டினையும் எம்மை கவனித்தவருக்கு கொடுத்துவிட்டு திருப்தியுடன் வெளியே வந்தால்

"இப்ப எதுக்குடா அவனுக்கு 'டிப்ஸ்' கொடுத்தனி?" - நண்பன்

"இல்லைடா... நாம கேட்டதெல்லாம் தந்து நல்லா கவனிச்சார்டா. அதுக்கு தான்" - நான்

"இங்கபார் இதையெல்லாம் நீ கொழும்போடு வைச்சுக்கொள். இங்க வந்து இவங்கள பழுதாக்க வேண்டாம். சரியா..."

"இதில என்னடா இருக்கு... ஒரு..." சொல்லி முடிப்பதுக்குள்

"நீ எந்த விளக்கமும் சொல்லதேவையில்லை. வர்றவங்களை கவனிக்க தான் அவங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்கள். இப்பிடி பத்து, இருபதில ஆரம்பிக்கிறது தான் பின்னாடி லஞ்சம், ஊழல் என்று பெரிதாகுது...."
இப்பிடியே ஆரம்பித்து கடைசில என்னை ஒரு கிரிமினல் குற்றவாளி அளவுக்கு கொண்டுவந்தான்.

"டேய்... போதும்டா சாமி. " என்று சொல்லி வெளிக்கிடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

சாப்பிட்ட களைப்பை விட அவனுடைய பிரசங்கத்தை கேட்ட களைப்பு தான் பின்னேரம் வரையும் இருந்திச்சு.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (17-Dec-14, 8:58 pm)
Tanglish : lancham
பார்வை : 77

மேலே