கோல கிறுக்கல் இனிக்கும்

கோல மார்கழி காலம்
அமமாத முழுதும் விடிந்தால்
எல்லோர் வாசலிலும் ....
நம் வீட்டில் எப்போதும்
நட்சத்திரம் சங்குப் பூ
பக்கத்துக்கு வீட்டில்
மல்லி ரோஜாப்பூ என
ரம்மியம் ....!
விரல்களோடு மாவும்
சிக்கிக் கொண்டதில்
சிக்குக் கோலம்
நெளிவு சுழிவோடு
அதிசயம்...!
விசேச நாட்களில் மட்டும்
வண்ண வண்ணமாக
ஜொலிக்கிறது வாசலில்
புத்தாண்டு பொங்கல் கோலங்கள்
ரங்கோலி ஆடிப்பாடி .....
இவையெல்லாவற்றையும் விட
அதன் அருகில் சின்னதாய்
மழலை போட்டி போட்டு
இட்ட கோலம் அழகானது
கிறுக்கல்களாய் ....!