பிரிந்த கை - இராஜ்குமார்
பிரிந்த கை
~~~~~~~~~~~
கவிதை ஏந்திய
காகிதம்
வேடிக்கை ஆவது
வாடிக்கைதான் ...
உள்வாங்கிய
உணர்வுகள் உணர்த்தும்
உண்மையின் உயிர்
ஊதி ஊதி ஓடும்
தேடலின் தேவை
நானே தான் ...
நான்
வளர்க்கும் விரலின்
வளர்ச்சி
கணுக்களை
கடன் தந்து
காதல் செய்யுதடி...
திட்டினாலும்
திருந்தாமல் ...
என்றுமே உந்தன் நினைவை
எழுதும்
எந்தன் கையை வெட்டி
கண்முன்
கட்டி வைத்தேன் ....
ரத்தம் சொட்ட சொட்ட
கன்னத்தில் அறைந்து
காதலி பேரில்
கவி சொன்னது
தேன்மொழியாய்...
- இராஜ்குமார்