மௌனக்காதல்

மௌனக்காதல்
(பெண்கள் பார்வையில்)

மழை நேரம்
காகிதக்கப்பல்
நான் செய்தால்
உன் வீடு வந்தே சேரும்
நான் காதல் செய்தேன்
அது உன்னை வந்துசேராதா?

வாசல் மரத்தில் தேன்கூடு
நாம் நின்று சேர்ந்தே பார்த்தோம்
நாம் சேர்ந்து நின்றிட
தேன்கூடுப்பார்க்காதா?

உன் வீடும்
என் வீடும்
தனி தனியாய்
கோலம் போட்டேன்
உன் வீடும்
என் வீடும்
நம் வீடாய் ஆகாத?

உன் கூறையில்
என் கூறையில்
தனிதனியாய்
புகைகள் பார்த்தோம்
அது ஒற்றையாய்
சேர்வதுப்போல்
நாம் சேர முடியாத?

பனிக்கால வைக்கோல் போல
என் நெஞ்சம் புகைக்கின்றேன்
கரையெறும் நண்டினைப்போல்
உன் ஒசைக்கு காத்துக்கிடக்கிறேன்

ஒட்டகள் சேர்க்கும் நீராய்
உன் நினைவை சேர்த்து வைக்கின்றேன்
தாகம்கொண்டகிணற்றுகயிராய்
உனக்காய் தேகம் நினைகின்றேன்


உங்கள் திண்ணை
எங்கள் திண்ணை
ஒலிந்து நம்கதைப் பேசாதா?

உயரம் நிற்கும்
தந்திமரம் நமக்காய்
காதல் தந்திக்கொடுக்காதா?

உடைந்து
கிளையில் வெளிவரும் பறவையாய்
உந்தன் காதல் இருக்காத?

அடா ஒற்றை பாறையில்
கிழே அமரும்
யோகம் நமக்கு வாய்க்காத?

காவுக்கொடுத்த
எலும்மிச்சைபழமாய்
இரண்டாய் நான்காய் ஆகின்றேன்

நோட்டின் கடைசிப்பக்கம்
வெறுமையாய்
தனிமையோடு தவிக்கின்றேன்

செம்பு வளையல்
போல் மரத்தில்
சாய்த்து உன்னைப்பார்க்கின்றேன்

கரையான் வைத்த
புத்தைப்போல
உயரே உயரே வளர்கின்றேன்


சிலுவையில் இருக்கும் இயேசுவின்
சிரிப்பை இருவரும் பெற்றிடுவோம்

இருவரும் ஒரு செடிப்பிடித்து நிறைய
கதைகள் பேசிடுவோம்

கைகள் கோர்த்து
காலம் நடந்து இனிய காதல் வளர்த்திடுவோம்

இன்னும் இனிய
காதல் செய்ய வழிகள் வாகுத்திடுவோம்

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (20-Dec-14, 9:10 am)
பார்வை : 108

மேலே