இது காதல்

முரட்டுக் காதலர்கள்
என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்

காதலனும் காதலியும் காதலித்து
திருமணம் முடிக்கவில்லை
காதலனனின் குழந்தை மேல்
உள்ள காதலால் காதலி
காதலனை திருமணம் முடிக்கிறாள்

அவனும் அவளும் குழந்தை
முன் அன்பானவர்கள்
வெளியே வந்தால் சண்டைக்காரர்கள்
இருந்தும் அவளுக்கு யாராவது
கிண்டலடித்தால் இவனால் தாங்க
முடியாது அவளும் அப்படித்தான்

ஒருவர் மேல் ஒருவருக்கு
எப்போதோ காதல் வந்து விட்டது
அவர்களின் முரண்டுத்தனம்
காதலை சொல்ல விடாமல்
தடுக்கிறது .அந்த குழந்தை தான்
அவர்களை ஒன்றினைக்கும் பாலம்

இருவரும் படுக்கையை பகிர்ந்து
கொள்வதில்லை அவள் எங்கோ
இவன் எங்கோ இருந்தும்
இருவரின் எண்ணங்களிலும்
காதல் லீலைகள்

காதலனும் காதலியும்
சேர்வார்களா? நானும் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்

நாட்கள் நகர்ந்தன
ஒரு பறவையாய் நான் வீட்டை
விட்டு செல்ல வேண்டிய
காலமும் வந்தது

மிகுந்த கவலையுடன் இறுதியாய்
ஜன்னல் வழியே முரட்டுக்
காதலர்களை பார்க்கிறேன்

அங்கே ஒருவர் மேல் ஒருவர்
சாய்ந்து காதலை சொல்வதை
கண்டேன் என்னை அறியாமல்
என் கண்களில் ஆனந்த கண்ணீர்

அன்பான காதலர்களை கண்ட
மகிழ்ச்சியில் வேறு வீடு
நோக்கி பறந்தேன்

எழுதியவர் : fasrina (21-Dec-14, 8:59 am)
Tanglish : ithu kaadhal
பார்வை : 71

மேலே