கற்பழிப்பிற்கு – நம் சட்டமும் ஓர் காரணமே

இன்றைய காலகட்டத்தில் நம் தேசம் முழுவது, கற்பழிப்பு சம்பவங்கள் தலைதூக்கி உள்ளது இதற்க்கு முக்கிய காரணம் நமது இந்திய சட்டமே.

முன்பெல்லாம் எப்பொழுதாவது இது போன்ற அசம்பாவிதங்கள் நடைப்பெரும் ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் நாளுக்கு நாள் கற்பழிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

3, 4 வயது குழந்தைகளை கற்பழிக்கும் காமகொடுரர்களும் நம் தேசத்தில் தான் உள்ளனர் . இவர்களை கைது செய்து சிறை என்னும் ஆடம்பர இடம் கொடுத்து அந்த ஈன பிறவியை விருந்தினர் போல் உபசரித்து 1, 2 ஆண்டுகளுக்குள் வெளியில் வரும் அயோக்கியர்கள் தவறு செய்து எப்படி தப்பித்துகொல்வது என்று சிறையில் இருக்கும் அயோக்கியர்களிடம் கற்று கொண்டு மீண்டும் இது போன்ற தவறுகளை செய்ய தொடங்கிவிடுகின்றனர்.

இது போன்ற தவறுகளில் ஈடுபடும் அயோக்கிய வெறியர்களுக்கு மரண தண்டனை வழங்குவதால் மட்டுமே கற்பழிப்பை தடுக்க இயலும்.

இல்லையெனின் ஒழுங்கான சட்டம் இல்லாத வரை கற்பழிப்பை தடுப்பது சாத்தியமல்ல...
எழுத்து : முஹம்மது சாலிஹ்

எழுதியவர் : (21-Dec-14, 1:50 pm)
பார்வை : 131

மேலே