பெண்கள் விழுந்து போனாலே வீழ்ந்து போனதென எண்ணும் உலகமே

தவறி விழும் பெண்களை -உலகம்
நசித்துக் கொல்கிறது
எறும்பு போல
கால்களுக்கு கீழே

தூக்கி விட- சில
கரங்கள் இருந்தாலும்
துணிவு இல்லை -அவர்களுக்கு
துன்பம் தமை சூழ்ந்து விடும் என்று

பெண்ணே நீ -
வீழ்வதை இப் புவி
அண்ணார்ந்து பார்க்கிறது -ஆனால்
கீழே குனிந்து பார்ப்பதுவில்லை

தூற்றுவதற்கு வார்த்தைகள் உள்ளபோது -
ஏற்றுவதற்கு வார்த்தைகள் இல்லையா -அல்ல
வார்த்தைகளுக்கு முட்டுக் கட்டை போடுகிறார்களா

தாய்மை கொண்ட பெண்மையை
தாசி என்று எண்ணுகிறார்கள் -அவர்கள் மேல்
வீண் பழி விழும் போது

எட்டிப் பார்க்குது விடுப்பு மட்டும் -
எகிறி பாயா பயந்து கொள்கிறது
மனமோ மரத்துப் போய் -அல்ல
மறுத்துப் போயோ

தனக்கென்று வரும் பொழுது
தாங்க முடியாமல் பொங்கியெழும் உள்ளம்
பிறருக்கு என வரும் பொழுது
ஆற்றிக் கொள்கிறதோ மனதை

நாலு பேரு நல்லது கதைக்க வேணும்
சமுதாயம் மதிக்க வேணும்
கெளரவம் கூட வேணும் -ஆனா
அனாதியாய் நிற்பதை பார்த்தால்
சாத்திக் கொள்கின்றன கதவுகளைப் போல
கண்களையும்

பழி வந்து -
வழியெல்லாம் விழும் போதும்
நிம்மதியாக துயில் கொள்ளும் -பல
உள்ளம்

பழி திணித்து ஏற்க
வைக்கும் மக்களே !

பழி ஏற்ற பெண்ணின்
விழி வழிந்த -
கண்ணீரும்
காய்ந்து போகிறது
தவறுகளை தட்டிக் கேட்ப்பதற்கு முன்னே !

சில விழிகளும் மூடிக் கொள்கிறது -இவ்
நிந்தையான உலகத்தைக் காணக் கூடாது என்றல்ல
இங்கு வாழும் மக்களைக் காணவே கூடாது என்று !

பெண்கள் விழுந்து போனால்
வீழ்ந்து போனதாக நினைத்துக் கொள்கிறது
அகிலம் வாழ் மக்கள்

வீழ்ந்து போனாலும்
விழுந்து போனாலும்
எழுப்பி விடுங்கள்
ஒழித்து விடாதீர்கள் !

எழுதியவர் : keerthana (21-Dec-14, 8:03 pm)
பார்வை : 133

மேலே