பட்டணமா பட்டிக்காடா தந்தை கூறும் கதை
நான் நாட்டுப் புரத்தில்
வாழ்ந்தேன்
மாட்டு வண்டிமேல்
பயணம் செய்வேண்
வேளாண்மை
விதைப்பேன்
தோட்டத்தில் களை
எடுப்பேன்.
கைக்குத்து அரிசி சோறு
நாட்டிலே வளர்ந்த கீரை கடலில் உடன்
பிடித்த மீன் குளத்தில் வாழும் மீன்
வீட்டில் வளர்த்த கோழி இவைதான்
என் உணவு
தேனீர் நேரம் மனைவியின்
கை பக்குவத்தில் தயாரான நொறுவல்
ஆடு மேய்ப்பேன் மாடு கட்டி பால் கறப்பேன்
ஓடி ஓடி உழைப்பேன் ஓய்வு நேரம் சாக்கு
கட்டில் மேல் குட்டி உறக்கம்
இல்லை
என்றால் ஒரு கதை புத்தகம் என் கையில்
காலையிலே எண்ணெய் தேய்த்துக் குளிப்பேன்
மண் முட்டி நீர் அருந்துவேன்
நெற்றிமேல்
விபூதி அதை தவிர வேறு ஒரு மேக்காப்பு இல்லை
நடை தான் அதிகம் உடலோ ஆரோக்கியம்
இன்று எனக்கு எண்பது வயது எழுந்து நடக்க
முடிகின்றது
நான் என்னைக் கவணிக்கும்
நிலமையிலே உள்ளேன்
ஆனால் என்
மகனின் நிலமையோ ஏறுக்கு மாறு
வேதனையாக
உள்ளது மச்சான் புலம்புகின்றார் பெரியவர்
என்னாச்சி?? ஏன் ??? இந்தக் கவலை ??
வினாவினார் பக்கத்தில் அமர்திருந்த மச்சான்.
சொல்கின்றேன் சொல்வதில் எனக்கும்
மனசி பாரம் குறையும்
என்று ஆரம்பித்தார்
வளரும் போதே பட்டணம் படிக்க சென்றான்
கெட்டே போனான் நேரத்துக்கு உணவு இல்லை
கண்ட கலர் எல்லாம் அருந்திப் பழகிபோனான்
வீட்டுக்கு வந்தாலும் இட்லி என்றால் முகம்
மாறி விடும்
ஏதோ பீச்சாவாம் அதை பற்றியே
பேசுவான்
தாய் எண்ணெய் வைக்க அழைத்தால்
மூக்கை சுழிப்பான்
குளத்து நீரை வெறுத்தான்
மண் முட்டி நீரை வெறுத்தான்
கொதி நீர் குளிக்க
ஏதோ ஒரு பெட்டியை அடம்பிடித்து
வாங்கி வைத்து அதன் உள்ளே நீர் வைத்து
அருந்துவான்
கேட்டால் குளிர் அதிகம் என்று
பதில் கூறுவான் கேலியும் செய்வான்
பட்டிக்காட்டு
அப்பாவுக்கு புரியாது இது என்று நானும் அதை
பெரிதாக எடுக்க வில்லை
முடிக்கு கொழ கொழ என்று
ஒன்றைப் போட்டு கச கச என்று தேய்ப்பான்
சிறு
வயதுதானே திருந்தி விடுவான்
என்று நினைத்தால்
அவன் திருந்த வில்லை
பட்டணத்துப் பெண்ணையே
கட்டிக்கிட்டான்
அவர்கள் வீட்டு சமையலை வெறுத்து
பல கடை உணவையே சுவைக்க ஆரம்பித்தனர்
அதன் விளைவு பலதரபட்ட நோய் உடலில் ஒட்டிக்
கொண்டது
மருந்து சாப்பிட்டே ஓய்ந்து போய்விட்டான்
நடை இல்லை எப்போதும் வாகனம் தான்
இப்போது மருத்துவமணையும் வீடுமாக
அழைகின்றான்
பிடித்து நடக்க துணை தேவைப்
படுகின்றது
இப்போதுதான் அறுவது வயது
ஒரு பெண் குழந்தை அவள் வெளியூர் மனைவியும்
கொஞ்சம்நோயாளிதான்
எல்லாம் பட்டணம்
கொடுத்த கட்டம்தான் மச்சான்
நாகரீக உடை
நாகரீக உணவு நாகரீக பேச்சு இப்போது நாடே
அறியாத நோய்
நான் என்ன பண்ணட்டும்
எல்லாம் தலை விதி
பெரும் மூச்சுடன்
நிறுத்தினார் பெரியவர்
அழைப்பு மணி
அடிக்கவே எழுந்து நடக்க அடி வைத்தார்
அடுத்தவர் தன் மக்களின் மேல் கவலை
கொண்ட படியே சிந்தனையில் அமர்ந்தார