விழிப்புணர்வும் ​​பெற்றிடுங்கள்

​முக்காடு போட்டவரரையும்
முழுதாய் நனைந்தவரையும்
முழுவினாடி ​நோக்கினால்
முழுமனதும் வலித்திடுமே !

அனாதைகள் எனகொள்வதா
அகதிகளோ எனநினைப்பதா
ஆதரவிலோர் எனநினைப்பதா
ஆழ்மனமும் வருந்துகிறதே !

விதைத்தவரை அறிந்திடாது
விளைந்திட்ட நாற்றுக்களோ !
விளைநிலமே மறைந்ததால்
விழுந்திட்ட விழுதுகளோ !

வீதியிலே நிற்கும்நிலை
வீணான வாழ்வின்நிலை !
சாலையில் இவர்கள்நிலை
சாட்டையடி மனதின்நிலை !

அனாதைசொல் மறையவும்
அகதிகள்நிலை மாறிடவும்
ஆதரவுகள் அதிகரிக்கவும்
ஆசைகள் அலைமோதுதே !

விழித்திடுங்கள் விழியுள்ளோர்
விழிப்புணர்வும் பெற்றிடுங்கள் !
வழியொன்றும் கண்டிடுங்கள்
வழிதோறும் விழிவையுங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-Dec-14, 10:18 pm)
பார்வை : 160

மேலே