யாரிடமும் சொல்லிவிடாதே ம்ம்ம்ம்

யாரிடமும் சொல்லிவிடாதே ம்ம்ம்ம்
=================================

என் ஆக்சிஜன் உறிஞ்சும் நீ தந்த பொறுமைகள்
இதற்காகத்தான் என்னும்
சந்தர்பம் உடைக்க
ஓரைப்பார்க்கிறது ,,
நெஞ்சுச்சளி கட்டிய நுரையீரலில்
ஒரு வியாக்கியான உருவம்
உன்னைப்போலவே
பாம்பு பார்வையால் பசிப்போக்குகிறது
ஊடல் பூசிய விசமெல்லாம்
நீ அள்ளிக்கொடுத்த
பனிக்குழைவுதான் தெரியுமா
அம்பலம் பேசுகிறது திட்டித் திட்டி
எனக்குள் பிரவேசித்தது உன் பூத உருவென்று,,,!!!
சாப்பிடாமல் உறங்கினால்
பேசமாட்டேன் போ என்றவள்
"ம்ச்ம்" என்ற இதழ் சிமிட்டல்களுக்கு அப்பால்
கவி சொல்லச்செய்து
வெண் பற்கள் வரிசை விரிக்கின்றாள்,,,!!!
முகம் குலுக்கி சொல்லுவாள்
நிலாக்காட்டி அள்ளித்தரவா என்று ,,,
ஆம் நிலாக்குளிக்கிறேன்
அதோ அவள் கண்கிணற்றின் க(ரை)றை ஒளியில்
கன்னக்குழியில் ம்ம்ம்ம்!!!!
இருநிலா !!!
அது இதுவரைக் காணாத கருநிலா மணிகள்
காண்கிறேனே பிறகென்ன ,,
கனவுகள் நனைத்த போர்வை எச்சில்
நிரப்பிக்கொள்ளும் ,
என் அடிவயிற்றின் வாயூ மண்டலத்தை,,,!!!
விழிகளால் விழிப்பறி செய்துவிட்டு
அசடு வழியக்கண்டவள்
மின்குமிழிகளின்
ஆயுட் குருடானப்பின்னேயே
செல்லமாய் முணு முணுக்கிறாள் ,,
பாய் போடலாமா மாமா என்று ம்ம்ம்ம் !!!

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (22-Dec-14, 2:59 am)
பார்வை : 149

மேலே