வாட்ஸ்அப் காதல்

குழு அரட்டையாம்...
நண்பன் என்னை சேர்த்தான்..
வெல்கம் டு த குருப்..
ஸ்ரீதிவ்யா படம் மட்டும் டீபி யில் ...
எப்போதும் online ...
காலை வணக்கம் தொடங்கி இரவு வணக்கம் வரை
எத்தனையோ கதைகள் ஏதேதோ வகைகள்..
இடையிடையே சிரிக்கும் முகங்கள் வேறு..
அவள் கதையின் பாவனை மட்டும்
எனக்கு பரிட்சையமானது போல இருந்தது..
காலப்போக்கில் ...
நண்பன் மேல் அவளுக்கு காதல் மலர
அவனும் அவள் selfie ஒன்று கேட்க
மாற்றினாள் டீபி - எனக்கு
ஏற்றினாள் பீபி
அன்று விலகியவன் தான்
குழுவிலிருந்து மட்டுமல்ல - என்
நண்பனிடமிருந்தும்..
அவள் என் முன்னாள் காதலி..
அவனுக்கு அது வாட்ஸ்அப் காதல்- அவளுக்கு
அது வெறும் வாட்ஸ் நெக்ஸ்ட் காதலே..!

எழுதியவர் : சுஜன் (22-Dec-14, 5:41 pm)
சேர்த்தது : சுஜன்
பார்வை : 318

மேலே