உண்மையான காதலை காதலியுங்கள்

என்ன வேண்டும் இனி ~

பார்வைகள் இல்லை ஆனால்
காதல் உண்டு

வேடங்கள் இல்லை ஆனால்
பாசங்கள் உண்டு

உருவங்கள் தெரியா ஆனால்
உணர்வுகள் உண்டு

கண்கள் தெரியா ஆனால்
காத்திருப்பு உண்டு

வார்த்தைகள் இல்லை ஆனால்
புரிதல் உண்டு

ஓசைகள் கேட்கா ஆனால்
ஆசைகள் உண்டு

பணமும் தெரியா
அழகும் தெரியா
காமமும் தெரியா காதல்

நேரத்துக்காய் காதலை
பொழுது போக்காக மாற்றுகின்ற
இன்றைய இளம் காதலர்களுக்கு
மத்தியில்

அழகும் பணமும் தெரியா -இந்தக்
காதல் சாவதும் இல்லை
அழிவதும் இல்லை

துடிப்பு இல்லாத இதயமும்
துடித்துக் கொள்ளும்
தூய்மையான காதல் இருந்தால்

காதலைக் காதலியுங்கள்
அது
உண்மையாக இருந்தால் மட்டும் !
அல்லாவிடின்
நேரத்தை வீண் ஆக்காதிர்கள் !

(இவையாவும் என் வாழ்வின் கற்பனையே
உங்கள் வாழ்வில் நிஜங்களாக இருந்தால்
உண்மையாகக் காதலியுங்கள் )

ஹா ஹா

எழுதியவர் : கீர்த்தனா (22-Dec-14, 6:31 pm)
பார்வை : 111

மேலே