உருவத்தின் உதடுகளில் ஓவியமானாய் - இராஜ்குமார்

உருவத்தின் உதடுகளில் ஓவியமானாய்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிறகின் விளிம்பில்
வர்ணனை பறித்து
வானின் பார்வைக்குள்
வர்ணத்தை தூவி
உருவத்தின் உதடுகளில்
ஓவியம் வரைகிறாய் ...

மொழியின் விரலில்
நதியை புகுத்தி
பூக்களின் இதழை
அலையாய் அமைத்து
பனித்துளி தேகமாய்
இடையை அசைக்கிறாய் ..

மின்சார முகத்தில்
மின்மினி மிதக்க
கற்பனை கழுத்தில்
கவிதை பதித்து
நிரந்தர நிஜமாக
நெற்றியை படைக்கிறாய் ...

சுந்தர நினைவினில்
தவங்களை செதுக்கி
மந்திர வரிகளாய்
மறுமொழி உதிர்த்து
அழகியல் தொகுப்பாய்
அடிக்கடி அழைக்கிறாய் ..

பல்லக்கின் திரைக்குள்
ஆவலை அடைத்து
தேரின் பாதையில்
கனவினை வளர்த்து
தேசத்தின் தெருவிலும்
காதலை விதைக்கிறாய் ..

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Dec-14, 6:53 pm)
பார்வை : 90

மேலே