மிருகம் தான் மானிடம்
வயல்களை அழித்து
கட்டடங்கள் எழுப்பி
வரப்புகள் உடைத்து
மதில்கள் உயர்த்தி
ஏர் பிடித்த உழவர்க்கு
கூழுக்கும் வழி
இல்லாமல் செய்து
மரங்களை அழித்து
பணமாய் மாற்றி
கோடிகளை கொடுத்து
மாடிகள் வாங்கி
கூடி வாழ்ந்த விலங்குகளை
தெருக்கோடியும் இன்றி
அலையவைத்து
நீதியை கூறுபோட்டு
அநீதி கையில் கொடுத்து விட்டு
அநீதியின் அடியாளாய்
நீதி தேவன் சேவை செய்து
பள்ளிகள் காமகூடங்கள்
என்றாகி
ஆசிரியர் காமகுருவாகி
கற்பழிப்பு பாடத்தை
கை குழந்தைக்கும்
கற்றுக்கொடுத்து
வளம் வனம் நீதி கல்வி கற்பு
இவைகளை
சுவைத்து விட்டு
ஏப்பம் விடும் மிருகம் அன்றோ
இழிவான மானிடம் .