உயிர் காக்கும் விவசாயம்

வானத்தை பார்த்தனர் இருவர்
வறியவன் பார்த்தான் மேகத்தை
மழையது பொழியுமா ஏக்கத்தில்
மண்ணில் விதைத்திடும் தாகத்தில்

வசதியில் வாழ்ந்த வலியவனோ
வாழ்ந்த இடத்தை உதறிவிட்டு
விரக்தி கொண்ட பேராசையில்
வேறுநாட்டைத் தேடுகின்றான்..

உயிரைசுமந்த தாய் மட்டும்
உதறித்தள்ளி போயிருந்தால்
உலகம் என்பது உனக்கில்லை
உயிர்கள் பூமியில் பிறப்பதில்லை..!

வசதிமட்டும் அனுபவித்தாய்
வறுமை யானால் ஓடுகின்றாய்
உழைக்கும் கைகளை விட்டுவிட்டு
ஊரைத்தேடி அழைகின்றாய் .?

தாயும் நாடும் சபித்துவிட்டால்
தண்ணிகூட கிடைக்காது
தலையைப் பிரிந்து உடல்மட்டும்
தனியே என்றும் வாழாது..

பாசம் விளைந்த மண்ணிதுவே
பழியைபோட்டுச் செல்லாதே..
உண்மை உள்ளம் உனக்கிருந்தால்
உழைக்கும் வர்க்கம் மறவாதே..!

எழுதியவர் : ஜேக் .ஜி .ஜே (23-Dec-14, 10:23 am)
பார்வை : 2177

மேலே