அழுகும் வாழ்க்கை
பிறந்து அழுது
அடம்பிடித்து அழுது
பள்ளி செல்ல அழுது
அன்னை அடித்து அழுது
கீழே விழுந்து
காயம்பட்டு அழுது
ஆசிரியர் திட்டி
மனமுடைந்து அழுது
வேலை தேடி அலைந்து
அதற்கும் அழுது...
காதல் தோல்வியடைந்து அழுது
திருமணம் நிகழ்ந்து
புது காதல் நிறைந்து
குழந்தை பிறக்கும் போது
மகிழ்ச்சியால் அழுது..
முதுமை யடைந்து
முடங்கி அழுது..
இறந்து பிறரை
அழ விட்டு
செல்கிறோம்..
அழுகி போகிறது உடல்..!
-ஹரிகரன்