பழைய பேனா முனைகள்

விரல் கிறுக்கி
விழி வழிந்தது - என் விதி

எழுத்து பிழையாகும்
சந்தேகம் - எழுத்தாணி
சபிக்கிறது - என்னை

எழுதி கிழித்த காகிதங்கள்
என்னை கடந்து விழுகின்றன.

எழுதாத பக்கங்கள்
எங்கோ பறந்து செல்கின்றன.

என் சட்டையை நானே
கிழித்து பார்த்தேன்....

என் தலைமயிரை
நானே கலைத்து பார்த்தேன்...

பழைய பேனா முனைகள்
பல்லிளிக்கும் காலத்தில்
நான் பரிகாசத்தில் கிடக்கிறேன்.

பார்த்து சொல்ல யார் வருவீர்?

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (22-Dec-14, 9:58 pm)
பார்வை : 112

மேலே