கடவுளும் மனிதனும்

இறைவன் ஒருநாள்
மாறுதல் தேடி மண்ணில் வந்தார் ;
வந்ததும் கண்டார்
மானிடப் பதரை ....
பணத்திற்காக குணத்தை
இழக்கும் மானிடன் இங்கே ....!
கலப்படம் இவனது
கலையாய் நிற்கும் .
இலஞ்சம் பெறவோ வஞ்சனைக்
காட்டாத வஞ்சகன் இவனை
கண்டார் கடவுள் .
பஞ்சமே இவனது நெஞ்சில் நிற்கும் .
எத்தனைக் காலம் இத்தனைப் போக்கும் ?
இத்தரை வாழ்வோ
நித்தியம் இல்லை .
மூப்பு மனிதனை முழுதும் குலைக்கும் .
மூளும் பிணியோ ஆளை சாய்க்கும் .
மூச்சுப் போனால்
முழுதும் போச்சு ....!
பெற்றோர் வைத்தப் பெயரையும்
மாற்றி சுற்றிலும்
உள்ளோர் பிணமே என்னும்
மானிடப் பிறவியைக் காணவா
வந்தேன் ? நெஞ்சம் கலங்கிய
இறைவன் தானும்
மண்ணின் மானிடப் பிறவியைப்
பார்த்து ஏய் ! மானிடா ! கேள் !
மற்றைய வழியில் ஈட்டிய
செல்வம் மடிந்தான் பின்னர்
தொடர்ந்திடல் இல்லை .
மற்றை உறவுகள் மடிந்தோர் தம்மை
ஒற்றிக் கொண்டு ஓடியதில்லை ;
நிலையாமை என்பதே
இவ்வுலகில் நிரந்தர வாழ்வு ..!
இறைவன் சொன்னதை கேட்ட
மனிதர் , உலகியல் வாழ்வில்
ஊசல் ஆடிப் பலன் சிறிதில்லை
எனப் பார்த்தனர் ;
கலங்கிய வாழ்வே காசினி வாழ்வென
விளங்கிய பின்னர்
வேண்டினர் நேயம் ...!
ஒருவருக்கொருவர் நேயம் கொண்டால்
உருவாக்கிடலாம் " சொர்க்கம் "
என்ற அருமை நெறியே
இறைவனை அடையும் நெறியென
அலைப்புறு மனிதன் அறியலுற்றான்.
ஆடியும் ஓடியும்
அடங்கிய பின்னர்
கூடும் அமைதியை கொடுப்பது தெய்வம்
நன்றே நிலவும் நல்லின்பத்தை
நன்றாய் தருவது என்றும் தெய்வம் ...!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Dec-14, 11:40 pm)
பார்வை : 72

மேலே