நீ தான் என் உத்தமி

என் உள்ளத்திலும்
என் இல்லத்திலும்
என் உத்தமியாய்
நீ வர வேண்டும்.

உண்மையாய் வாழ
உன்னையே அழைக்கிறேன்
உன்னை உயிராய் நினைக்கிறேன்
என் உத்தமி நீ என்று.

உலகமே அழிந்தாலும்
என் உள்ளத்தில் நீ
அழியாமல் என்றும்
உசுறாய் நீ இருப்பாய்.

நீ தான் என் உத்தமி
என்று ஊரை கூட்டி
சொல்வேன் நான்
உண்மையாய் உன்னை.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (23-Dec-14, 10:22 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : nee thaan en uttami
பார்வை : 101

மேலே