சந்தேகம்

காதலுடன் துவங்கியது மேனகாவின் வாழ்க்கை. சுற்றம் படைசூழ சொந்தங்கள் வாழ்த்த மங்கள நாணை அவள் கழுத்தில் கட்டுகிறான் பிரகாஷ். அன்பான வாழ்வின் அடையாளமாய் மறுவருடமே அழகான பெண்குழந்தைக்கு தாயாகிறாள் மேனகா. ஊரார் கண்பட பெற்றோர் போற்ற பெருமையான வாழ்வு. கணவனின் பாசத்திலும் மகளின் அன்பிலும் புரித்து போகிறாள் மேனகா.

இதற்கிடையில் தனது கல்லூரி தோழி ஆனந்தியை பார்க்கிறான் பிரகாஷ். அவர்களது நட்பு பலபட மேனகாவின் வாழ்வில் புயல் வீச ஆரம்பிகிறது. பிரகாஷ் ஆனந்தியிடம் பேசுவதை வெறுக்கிறாள் மேனகா. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு மேலோங்க இருவரும் பேசுவதையே தவிர்க்கின்றனர் .

நிம்மதி இல்லா மனதிற்கு ஆறுதல் தேடி மதுவை நாடுகிறான் பிரகாஷ். மதுவின் மயக்கத்தால் வீட்டை மறந்து அதற்கு அடிமையாகிறான். தன் கணவனின் நிலைக்கு தானே காரணம் என தன் உயிரை விட துணிகிறாள் மேனகா. இறுதியாக தன் கணவனின் வருகைக்காக காத்திருக்கிறாள்

அவன் வந்ததும் அவனிடம் " மாமா உன்ன ரொம்ப பிடிக்கும் உன்ன நான் காதலிக்கிறேன் உன்னக்கு அவள பிடிக்கும்னா நீ அவள கல்யாண பண்ணிட்டு சந்தோசமா இரு. ஆனா குடிக்காத " என்று கூறி அழுகிறாள். ஆனால் அவனோ சிரிக்கிறான் " அடி பைத்தியமே நான் உன்ன தானே காதலிக்கிறேன் அவள எப்படி கல்யணம் பண்ண முடியும். என் மேல இம்புட்டு பாசத்த வச்சிட்டு என்கிட்டையே பேசாம இருக்க நீ என்கூட பேசணும் தான் நான் தண்ணி அடிச்ச மாதிரி நடிச்சேன். சந்தேக பட்டு நீ நாம வழக்கைய கெடுத்துக்க கூடத்துல. இபோ புரியுதா சந்தேகம் எவ்வளவு பெரிய வியாதின்னு. அவ என் தோழி மட்டும் இல்லடி என் தங்கச்சியும் தான் " என்று கணவன் கூற அசட்டு சிரிப்புடன் கணவனின் நெஞ்சில் சாய்ந்தால் மேனகா.

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (23-Dec-14, 10:55 pm)
Tanglish : santhegam
பார்வை : 326

மேலே