பழிக்குப் பழி
பழிக்குப் பழி!
நன்றாக காய்த்து குலுங்கிக் கொண்டிருந்த அந்த மாந்தோப்பில் திருடன் ஒருவன் நுழைந்து பழங்களை பறிக்க ஆரம்பித்தான்.
அந்த நேரம் பார்த்து தோட்டக்காரரும் அங்கு வந்து சேர்ந்தார்.
“ஏய்..! யாரப்பா..அந்த மரத்துலே..? என்னப்பா செய்து கொண்டிருக்கிறாய்?” – என்று அதட்டிக் கேட்டார்.
தோட்டக்காரரின் தோற்றம் பழுத்த பக்திமானாக காட்ட, அவரை ஏமாற்ற முடிவு செய்தான் அந்த கில்லாடி திருடன்.
இப்படி சொன்னான்: “கடவுளின் அடியானாகிய நான், கடவுளின் அருளான மரத்தில், கடவுள் தந்த கையால், கடவுளின் அருளால் காய்த்துத் தொங்கும் பழங்களை பறித்துக் கொண்டிருக்கின்றான்!” – என்றான்.
“அப்படியா…? சரி.. சரி.. கடவுளின் அடியானே இறங்கிவா…!” – என்று சொன்ன தோட்டக்காரர் திருடன் இறங்கி வந்ததும் அவனை பக்கத்தில் இருந்த மரத்தில் கட்டிப் போட்டார்.
தயாராக வைத்திருந்த பிரம்பால் நையப் புடைத்தார்.
அடி தாள முடியாமல் திருடன், “கடவுள் பக்தனான என்னை ஏன் இப்படி சாவடி அடிக்கிறீர்கள்?” – என்று கூப்பாடு போட்டான்.
தோட்டக்காரர், இன்னும்இரண்டு விளாசி விளாசுவிட்டு சொன்னார்:
“கடவுளின் அடியானின் தோட்டத்தில் திருடியதற்கு, கடவுளின் அருளான பிரம்பால்.. கடவுள் கொடுத்த கையால், கடவுளின் அடியான் உன்னை அடிப்பதில் என்ன தப்பு?
நன்றி ;ஜனனி
தமிழ் உலா தளம்