மனிதமும் புரிதலும்

குப்பை தொட்டி தேடிச் சென்று
குப்பை போடும் குழந்தை யின்
குணத்தை எண்ணி மகிழ்கிறேன்

தளர் நடையால் பாதை தாண்ட
தவித்து நிற்கும் முதியோர்க்கு
பரிந்து தவும் இளைஞர் போற்றினேன்

கல்வி கற்க காசு இல்லா
எளியோர்க்கு புரிந்து தவும்
பாரியால் மாரி பார்க்கிறேன்

கண் தெரியா உயிர்க்கு தன்
கண் மறைந்த பின்னும் ஒளி
கண் தந்து திறப்பதை வாழ்த்தினேன்

முக மறியா மனிதர்க்கு
உதிரம் உடன் தந்து
உயிர் பிழைப்பதை வணங்கினேன்

உயிர் பிழைப்ப தில்லை இனி
உதவட்டும் பிறர்க் கென
உடல் தானம் கண்டு நெகிழ்கிறேன்

மனிதமும் புரிதலும் கவிகள்
வரியில் ஜதி போட அதில்
நிஜம் எது என தேடினேன்

எழுதியவர் : முரளி (24-Dec-14, 9:48 am)
பார்வை : 121

மேலே