வாயில்லா ஜீவன்கள் வாய்திறந்தால்
நடுரோட்டில் நின்றுகொண்டு
நாள்முழுக்கப் போராட்டம்
வாயில்லாத ஜீவனுக்கும்
வாக்குரிமை வேண்டுமென்று
அதிகரிக்கும் சங்கங்கள்
அபகரிக்கும் கொள்ளைகள்
உயிரைகாக்க தங்களுக்கும்
உரியசங்கம் வேண்டுமென்று..
நன்றியில்லா மனிதனுக்கு
நாளெல்லாம் நானிருக்க
நாதியற்ற எங்களுக்கோ
நடுரோட்டில் வாழ்வெதற்கு..!