இளைஞனே விழித்தெழு
தந்திரமாக தந்த சுதந்திரமிது !
ஓட்டை சட்டத்தை உனக்குள் திணித்து
கருப்பாடுகளை ஒளித்து வளர்க்குது நன்று !
இருட்டுக்குள் இருக்கும் சட்டத்தை வெளிச்சமிடு !
இனியேனும் விடியட்டும் !
விழி நீர் வழியாதிருக்க
இளைஞனே இப்போதே புறப்படு!
மூட்டு வலியால் அவதியுறும்
மூத்த தலைவருக்கெல்லாம் விடைகொடு !
பாராளுமன்றத்தை கைப்பற்றி
மக்கள் மன்றத்தின் சட்டங்களை மாற்ற
தீப்பொறியாய் புறப்படு !
பழையன கழித்து புதுமையை புகுத்து !
பெண்குலம் வாழ்த்தட்டும் மனிதம் வாழட்டும் !
பாரத மாத ஆடையின்றி அலங்கோலத்தில் தவிக்கின்றாள்
அண்டை நாட்டினரின் காமத்திற்கு ஆளாகி
உலக அரக்கனின் நகையாகி கூனி குறுகி
ஆபத்தண்டவனை எதிர்நோக்கி அழுகிறாள் பாரும் !
ஒ! இளைஞனே இரக்கமில்லையா !இல்லை
உணதானந்த தண்டவ உச்சத்தில் அபலை குரல்
செவியில் விழ வில்லையோ !
உணவும் உறைவிடமும் தந்தவள்
உடையும் உறக்கமுமின்றி தவிக்கின்றாள் !
அந்நிய மோகத்தை தவிர்த்து
அன்னையின் மானத்தை காக்க
அறிவினை ஆட்சி மன்றத்தில் காட்டு !
எவனோ இழக்கின்றான் நமக்கேன் ?என்ற நினைப்பு !
நாளை உனக்கும் வரலாம் !சிந்தையில் கொள் !
புரட்சி செய்யாது ஒரு மலர்ச்சி இல்லை !
மலர்ந்த பின் உந்தன் வளர்ச்சியை
நாளைய சரித்திரம் பேசும் !
சரித்திரம் படைக்க இன்றே தரித்திரம் தொலைப்போம் வா !
இன்றைய இளைஞன் நாளைய மன்னனெனும்
கனவை நினைவாக்க வா !