சிகரம் தொட்ட சினிமா

நீர்க்குமிழி மெல்ல
....மெல்ல மூழ்குகிறது !
சிந்து பைரவி
....கண்ணீர் வெள்ளமாகிறது !
அபூர்வ ராகங்கள்
....எல்லாம் மௌனமாகிறது !
நினைத்தாலே இனிக்கும்
....இனி கனவுகளாகிறது !
வறுமையின் நிறம்
....கன்னங்களில் சிவக்கிறது !
தண்ணீர் தண்ணீர்
....கானல் நீராகிறது !
புன்னகைக்க மன்னன்
....மனம் மறுக்கிறது !
எதிர்நீச்சல் தெரியாது
....சினிமா தத்தளிக்கிறது !
பொய் நீ-இல்லை
....என்பதே மெய்யாகிறது !

படைப்புகளில் மட்டுமல்ல
படைப்பாளியாகவும் வானமே எல்லை என்றாகிவிட்டாய் !!

சொர்க்கத்தில் புதுப்புது அர்த்தங்களை சேர்க்கப் புறப்பட்டுவிட்டாயோ ?!?

இயக்குநர் சிகரமே !
காலம் உள்ளவரை..
உன் படைப்புகள் வாழும் !!

எழுதியவர் : முரா கணபதி (24-Dec-14, 10:50 am)
பார்வை : 430

மேலே