மறந்து விடு என்னை நீ

காதல் மோகத்தில்
காம தாகத்தில் நான்
உன்னிடம் நடந்து கொண்ட
விதத்தில்..

கோபம் தாபம் இருப்பினும்
குற்றம் குறை இருப்பினும்
மன்னித்து கொள் என்னை
நீ.

மாமன் மகள் இருக்கிறாள்
நான் மணந்து கொள்ள
இருப்பதால் மறந்து விடு
என்னை நீ..

மறுப்பு ஏதும் சொல்லாமல்
மாற்றி கொள் உன்னை நீ
மாற்றி விட்டேன்
என்னை நான்.

மனதார வாழ்த்தி விடு
மங்களமாய் நான் வாழ
மன்னித்து விட்டு விடு
மறந்து விட்டேன் உன்னை நான்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (24-Dec-14, 12:32 pm)
பார்வை : 659

மேலே