பசி - சந்தோஷ்

நாளைய பசியும்
இன்றைய வயிறும்
என் கையிலிருக்கும்
ஒரே ஒரு
நூறு ரூபாயை எதிர்ப்பார்த்து..
கொடூர கோபத்துடன்
ஏங்கிக்கொண்டிருக்க,
என் புத்தியோ
இருநூறை நூறாக்க
பாரதியாரையும்
பாவேந்தரையும்
பேரம் பேசிக்கொண்டிருக்கிறது
பழைய புத்தக கடையில்...!

--------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார் (24-Dec-14, 8:22 pm)
பார்வை : 114

மேலே